• Thu. May 21st, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

திருமங்கலம் ஆர்டிஓ அலுவலகத்தில் எப்சி எடுப்பதற்காக காத்திருந்த வாகனங்கள்..,

ByKalamegam Viswanathan

May 20, 2026

திருமங்கலம் R.T.O அலுவலகம் திருமங்கலம் ஆலம்பட்டி அருகே செயல்பட்டு வருகிறது. இங்கு ‌இன்று‌ நான்கு சக்கர வாகனங்களுக்கு F.C.எடுப்பதற்காக காலை 7:00 மணிக்கு வந்து காத்திருக்கத் தொடங்கினார்.

திருமங்கலம் R.T.O சங்கீதா இவர் திருமங்கலம் மற்றும் உசிலம்பட்டி இரண்டு தாலுகாக்களில் ஆர்டிஓவாக பணியாற்றுகிறார். பணிக்கு வந்த ஆர்டிஓ ‌சில வாகனங்களை மட்டும் சோதனை செய்துவிட்டு உணவு அருந்தி விட்டு வருவதாக காலை 11 மணிக்கு சென்றவர் மாலை வரை வந்து வாகனங்களை சோதனை செய்யவில்லை என்று வாகன ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.

வெயிலில் காத்திருந்த வாகன ஓட்டுனர்கள் நீண்ட நேரம் ஆகியும் ஆர்டிஓ வராததால் ஆத்திரத்தில் ஆர் டி அலுவலகத்திற்குள் புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பானது. 30க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் F.C எடுப்பதற்காக திருமங்கலம் ஆர்டிஓ அலுவலகத்திற்கு காலை 7:00 மணிக்கே வந்த நிலைமையில் 11 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்ட R.T.O சங்கீதா 11 30 க்கு மதிய உணவு அருந்துவதாக சென்று விட்டதாகவும் குற்றம் சாட்டி ஓட்டுநர் ஒருவர் தனது செல்போனில் நடந்ததை பேசிக்கொண்டே வீடியோ பதிவு செய்கிறார். உடனே அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த ஆர்டிஓ சங்கீதா அவருக்கு எந்த பதிலும் அளிக்காமல் வாகனங்களை சோதனை மேற்கொள்ள செல்கிறார்.

அந்த வீடியோவை அந்த ஓட்டுநர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில் அது வேகமாக பரவி வருகிறது. தகுதி சான்றிதழ் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் காத்திருந்த வாகன ஓட்டிகள் சிலர்‌ அதிகாரி வர தாமதமானதால் செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.