விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு கவலைத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மணல் மற்றும் மண் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர்கள் டிப்பர் லாரி மாட்டுவண்டி உள்ளிட்ட வாகனங்களை மீது வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இராஜபாளையம் வடக்கு காவல் நிலையம் சுற்றிலும் நிறுத்தப்படுகிறது.

இது பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறாக இருப்பதாலும் வாகனங்களை மைட்ஸ் நிறுவன மூலம் ஏலம் விடுவதற்க்கு விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் இராஜபாளையம் வடக்கு காவல்துறை அறிவுறுத்தலின்படி இராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற உதவியுடன் வழக்குகளில் கையக படுத்தப்பட்டு சாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொண்டு போய் நிறுத்தப்பட்டது .

மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் கிரேன் மற்றும் டிராக்டர் உதவியுடன் வாகனங்களை கொண்டு போய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தினர்.