மதுரை வைகை ஆற்றில் கள்ளழகரை வரவேற்ற வீரராகவ பெருமாள் வைகையாற்றிருந்துமீண்டும் கோயிலுக்கு எழுந்தருளினார்.
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரை வரவேற்க சென்ற மதுரை வீரராகவப் பெருமாள் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் கோவிலுக்கு திரும்பினார்.

மதுரை சித்திரைத் திருவிழாவின் சிறப்பு வாய்ந்த முக்கிய நிகழ்ச்சியாக வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். நேற்று முன்தினம் அழகர் கோவிலில் இருந்து பல்லாக்கில் புறப்பட்ட கள்ளழகர் பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளி இன்று காலை 5 40 மணியளவில் வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
அவரை வரவேற்பதற்காக வீரராகப் பெருமாள் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளுவார். பின்னர் இருவரும் அறநிலையத்துறை மண்டபம் மற்றும் லாலா சத்திரம் மண்டபம் ஆகியவற்றிலிருந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.
வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீரராகவ பெருமாள் மீண்டும் கோவிலுக்கு திரும்பினார். வைகை ஆற்றில் இருந்து அம்மன் சன்னதி வழி யே வீரராகவப் பெருமாள் சன்னதிக்கு திரும்பினார்.
வழிநெடுக பக்தர்கள் வரவேற்புக்கு பின் கோவிலை சென்றடைந்தார்.
அம்மன் சன்னதி அருகே வந்த வீரராக பெருமாளுக்கு அழகர் வேடமணிந்த பக்தர்கள் தண்ணீர் பீச்சி வரவேற்பு அளித்தனர்.