• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா. ஆண்டிபட்டியில் கொண்டாட்டம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பில் ,அவரின் 263 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

அதனை முன்னிட்டு ஆண்டிபட்டியில் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள மாலை கோவில் வளாகத்தில் கட்டபொம்மனின் முழு உருவப்படம் வைக்கப்பட்டு,பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ,வர்த்தக சங்கம் சார்பில் பாண்டியராஜன், ரமேஷ் உள்ளிட்ட பிரமுகர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கட்டபொம்மனின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

திமுக சார்பில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையில் நிர்வாகிகள் கட்டபொம்மனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தனர் ,அதனைத்தொடர்ந்து அதிமுக சார்பில் ஆண்டிபட்டி ஒன்றிய குழு பெருந்தலைவர் லோகி ராஜன், அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து கட்டபொம்மனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வணங்கினார்கள். அதனைத்தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் சமூக ஆர்வலர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து தேனி பிரபல தொழிலதிபர் கவிதாலயா சரவணன் வர்த்தக சங்கம் சார்பில் வந்திருந்து, கட்டபொம்மனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ஊர்வலமாக மதுரையை நோக்கி சென்றனர்.பண்பாட்டுக் கழகம் சார்பில் இளைஞர்கள் தேவராட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட ஆட்ட நிகழ்ச்சிகளை நடத்தி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.