• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வீரன் படம் குழந்தைகளுக்கானது

Byதன பாலன்

May 22, 2023

‘சக்திமான்’ போல ‘வீரன்’ படமும் எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும் என்று ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஹிப்ஹாப் ஆதி தெரிவித்துள்ளார்.
‘மரகத நாணயம்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கியுள்ள புதிய படம் ‘வீரன்’. இதில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடித்துள்ளார். சத்ய ஜோதி நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. இதில் ஆதிரா ராஜ், வினய், முனீஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (மே 20) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசியதாவது:
‘வீரன்’ குடும்பங்களுக்கான படமாக இருக்கும். இதற்கு முன்பு என்னுடைய படங்கள் அப்படித்தான் என்றாலும், இதில் குழந்தைகளுக்கான விஷயங்கள் நிறைய இருக்கிறது. நான் ஒரு 90’ஸ் கிட் என்பதால் எனக்கு சக்திமான் மிகவும் பிடிக்கும். அதுபோல, ‘வீரன்’ ஒரு தமிழ் சூப்பர் ஹீரோவாக நீண்ட காலத்திற்கு குழந்தைகளுக்கு பிடித்ததாக இருக்கும். உடல் ரீதியாக மிகவும் சவாலாக இந்த படம் இருந்தது. இதற்கு முன்பு நான் இது போன்ற ஆக்‌ஷன் காட்சிகளை செய்ததில்லை. நான் இதுவரை நடித்த ஐந்து படங்களிலேயே இதுதான் பெரிய படம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.