• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வீர வெங்கட்டம்மாள், பாப்பாத்தியம்மாள் கோவில் கும்பாபிஷேகம்

Byகாயத்ரி

Sep 9, 2022

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் அம்மா பட்டியில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான அருள்மிகு அங்காள ஈஸ்வரி, வீர வெங்கட் டம்மாள் ,பாப்பாத்தி அம்மாள் மற்றும் பரிவார தெய்வங்களான சிவபெருமான் ,விநாயகர், முருகன், வள்ளி தெய்வானை ,கருப்பண சாமி ,ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.விழாவை முன்னிட்டு இரண்டு நாட்களாக யாகசாலை பூஜை செய்யப்பட்டு , கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம் முடிவடைந்து பூர்ணாகுதி நிகழ்ச்சி நடந்தது .

இதனையடுத்து நேற்று காலை கடம் புறப்பாடாகி கோவிலின் விமானக் கலசத்திற்கு பல்வேறு புண்ணிய ஸ்தலங்கள் இருந்து கொண்டுவரப்பட்ட பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக நிகழ்வு நடந்தது .இதனையடுத்து மூலவர் மூலவர்களுக்கு பால் ,பழம் , நெய், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 21 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதனையடுத்து மகா தீபாராதனை காட்டப்பட்டது, பொதுமக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது .பக்தர்கள் பயபக்தியுடன் கும்பாபிஷேகத்தையும், மகா அபிஷேகத்தையும் கண்டுகளித்தனர். இதன் பிறகு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது . நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக் குழுவினரும், ஊர் பொதுமக்களும் செய்து இருந்தனர்.