மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மணலூர் தெற்கு தெருவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வீரமகா காளியம்மன் ஆலய பால்குட காவடி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக சோழம்பேட்டை காவேரி ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் முன்னே செல்ல பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்து வாரு அலங்கார காவடிகள் புறப்பட்டு வானவேடிக்கை மேலுதல வாத்தியங்களும் முழங்க ஊர்வலமாக முக்கிய விதிகள் வழியாக ஆலயம் வந்து அடைந்தது.
பின்னர் பக்தர்கள் தலையில் சுமந்து வந்த பாலை கொண்டு அம்மனுக்கு அபிஷேகமும் மகாதீப ஆராதனையும் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காளியம்மன் வழிபட்டு சென்றனர்.
