நான்குநேரி சட்டமன்ற தொகுதி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த வசந்த குமார் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராக இருந்த போது கொரோன பாதிப்பால் மரணம் அடைந்தார்.

சென்னையில் வசந்த குமார் மரணம் அடைந்த நிலையில் அவரது பூத உடல் அவரது சொந்த ஊரான குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. வசந்த குமார் அடக்கம் செய்யப்பட்ட இடம் நினைவிடமாக உருவாக்கப்பட்டது.
ராகுல் காந்தியால் வசந்த குமார் நினைவிடம் திறக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் வசந்த குமார் நினைவுதினத்தில்,குடும்பத்தார், உறவினர்கள், வசந்த் அன்கோவின் தொழிலாளிகள், அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், பொதுமக்கள் என அஞ்சலிக்கு பின், சமபந்தியுடன் வசந்த் குமார் நினைவு தினம் நினைவு கூறப்படுகிறது.

வசந்த குமாரின் மறைவின் 5 _ம் ஆண்டு நினைவி தினம் இந்த ஆண்டு நினைவு தினத்தன்று. தந்தை சொல்லுக்கு தப்பாது பிள்ளையான,அவரது மகன் விஜய் வசந்த் இடைத்தேர்தலில், அதன்பின் பொது தேர்தலில் என இரண்டு முறை தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றார்.
இந்த 5_வது ஆண்டு நினைவு தினத்தில். கொட்டாரம் பகுதியில் உள்ள பெரும் தலைவர் காமராஜரின் சிலைக்கு விஜய் வசந்த் மாலை அணிவித்தபின். காமராஜர் சிலை அருகே இருந்து, அகஸ்தீஸ்வரம் வசந்த குமார் நினைவிடம் வரையில். வசந்த குமார் நினைவு ஜோதி பாதயாத்திரை நடைபெற்றது.

வசந்த குமார் நினைவிடத்தில் விஜய் வசந்த் குடும்பத்தினர் விளக்கேற்றி பூஜைகள் செய்தபின் தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு, முன்னாள் ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மரிய ஜெனிபர், காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொருப்பாளர்கள் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் நினைவை போற்றினார்கள்.
