• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அல்டிமேட்டில் ஆட்டத்தை தொடங்கிய வனிதா

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில், அமைதியாக வீட்டிற்குள் நுழைந்த வனிதா விஜயகுமார், தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்.

முதல்வார கேப்டன் ஷாரிக் முதல் பாலாஜி முருகதாஸ் வரை அத்தனை போட்டியாளர்களையும் இரிடேட் செய்வது போல வனிதா விஜயகுமார் சோபாவில் அமர்ந்து கொண்டு ஆர்டர் போடுவது எந்தவொரு ஹவுஸ்மேட்டுக்கும் பிடிக்கவில்லை. அதே போல கடைசியாக மற்ற ஹவுஸ்மேட்களை பழிவாங்கும் நடவடிக்கையிலும் இறங்கி தனது கேமை ஆடுகிறார்.

பிக் பாஸ் அல்டிமேட்டின் துவக்க நிகழ்ச்சியில் பெண்கள் எம்பவர்மென்ட் எல்லாம் கமல் சாரே சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்கும் அளவுக்கு கதையளந்த வனிதா விஜயகுமார், மீண்டும் தனது ராங்கித்தனத்தை ஆரம்பித்து விட்டார். இதுக்குத்தானே உங்களை சூஸ் பண்ணினோம் என பிக் பாஸ் குழுவும் செம ஹேப்பியாக உள்ளது.

முதல் வார கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷாரிக், வனிதாவால் அதிகமாக டென்ஷன் ஆகி உள்ளார். காபி வேண்டும் என வனிதா கேட்க, அவருக்கு காபி கொடுத்து, வெளியே அனுப்புமாறு கேமராவை பார்த்து கேட்கிறார் ஷாரிக்!

அதேபோல், அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ் என யார் பேசினாலும் எதிர் கவுன்ட்டர் கொடுத்து அவர்களை ஆஃப் செய்கிறார் வனிதா! ஆரம்பமே இப்படி இருந்தால் இவருடன் 70 நாட்கள் எப்படி குப்பைக் கொட்டுவது என நினைத்து 6 பேர் ஓட்டுப் போட்டு இவரை வெளியேற்ற நாமினேட் செய்துள்ளனர். தனக்கு காபி வராத வரை இந்த வீட்டில் இருக்கும் யாரும் டீ குடிக்கக் கூடாது என்பதற்காக ஒட்டுமொத்த டீ தூள் பேக்கெட்களையும் தனது பெட்டுக்கு அடியில் ஒளித்து வைக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

தற்போது நாமினேட் செய்யப்பட்டுள்ள வனிதா விஜயகுமார், குறைவான ஓட்டுக்களுடன் டேஞ்சர் ஜோனில் உள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது!