• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

காந்தி சிலை உடைப்பு.., கம்பம் நகரில் பரபரப்பு…

ByM. Dasaprakash

Nov 29, 2023

தேனி மாவட்டம் கம்பம் நகரில் குமுளி தேனி தேசிய நெடுஞ்சாலையில் காந்தி சிலை அமைக்கப்பட்டு உள்ளது. முக்கிய தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் காந்தி சிலையின் முன்பு அவ்வப்போது பல்வேறு விழாக்களை நடத்தி வருவது வழக்கம்,
இந்நிலையில் காந்தி சிலையின் வலது கை உடைக்கப்பட்டு சிலையில் இருந்த ஒரு கை இல்லாமல் இருப்பதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிலையில் இருந்த கையை அகற்றி அங்கிருந்து எடுத்துச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

காந்தி சிலையை சேதப்படுத்தியது தெரியவந்து காங்கிரஸ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் சிலையின் முன்பு அமர்ந்து காந்தியின் சிலையை அவமதித்த குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டுமென வலியுறுத்தி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மர்ம நபர்களால் காந்தி சிலை உடைக்கப்பட்டு அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருப்பதும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது கம்பம் நகர் பகுதியில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.