கோழிகளை ஏற்றி சென்ற வேன் முன்னாள் சாலையின் நடுவே நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதி, 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொள்ளாச்சி சாலை கே. கிருஷ்ணாபுரம் பிரிவு அருகே பழுதான லாரி ஒன்று சாலையின் நடுவே நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்த வழியே கோழிகளை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் ஒன்று கட்டுப்பாட்டை இலந்து சாலையின் நடுவே நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் பழமாக மோதியது. இதில் வேனில் பயணித்த கவியரசு 23, பாபு 52 ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் வேன் டிரைவர் ராஜ்குமார் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து அவ்வளியே சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடம் விரைந்து சென்ற காமநாயக்கன்பாளையம் போலீசார் விபத்தில் சிக்கி இருந்த வேன் டிரைவர் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வேனில் சிக்கி இருந்த இருவரின் உடல்களை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வேன் டிரைவர் முதலுதவி சிகிச்சை பெற்ற, பின்னர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லடம் அருகே அதிகாலையில் நடந்த விபத்தில் இரண்டு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.









