• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

புத்தகப் பூங்காவிற்கு கலைஞரின் பெயரை பரிந்துரைத்த வைரமுத்து…

Byகாயத்ரி

Mar 16, 2022

அனைத்துவிதமான நூல்களும் ஒரேயிடத்தில் கிடைக்கும் நோக்கில் மாபெரும் புத்தகப் பூங்காவானது அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், புத்தகப் பூங்கா அறிவிப்புக்கு மாண்புமிகு முதல்வருக்கு மனமார்ந்த நன்றி. இந்த புத்தகப் பூங்காவுக்கு முத்தமிழறிஞர் கலைஞரின் திருப்பெயர் சூட்டவேண்டும் என்ற கோரிக்கையை நான் முதல்வருக்கு முன்வைக்கிறேன். “புத்தக பூங்காவால் அறிவுலகம் மகிழும் கலைஞர் பெயர் சூட்டினால் தமிழ் உலகம் புகழும்” என்று பதிவிட்டுள்ளார்.