சென்னை அண்ணாநகரில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் இன்று பிற்பகலில் பயங்கர தீ விபத்து ஏற்ப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தகவலறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர். இப்பணியில் நவீன தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்பட்டு தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் ஒரு தனியார் வங்கி இயங்கி வருகிறது. மேலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றும் செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீ விபத்து நேரிட்ட கட்டிடத்தில் சிக்கியிருந்த 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.