தமிழ்கடவுள் முருக பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள் மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா நடைபெற்று வருகிறது.
கடந்த சிலதினங்களுக்கு முன் வைகாசிவிசாக திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி 3வது நாளான நேற்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்,பூஜைகள் நடைபெற்றன.
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பரங்குன்றம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வைகாசி மாதம் 22ஆம் தேதி வைகாசி விசாகத் திருநாள் முன்னிட்டு வசந்த உற்சவத்தில் இன்று மூன்றாவது நாள் சுப்ரமணியசாமி தெய்வானைக்கு மாலை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்று சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணியசுவாமி தெய்வயானை வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி மூன்றுமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.