ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மடவார் வளாகத்தில் உள்ள சிவகாமி அம்பாள் உடனுறை வைத்தியநாத சுவாமி திருக்கோயில் புகழ்பெற்ற சைவத்திருத்தலமாகும். சிவபெருமான் 24 திருவிளையாடல்கள் புரிந்த இந்த திருத்தலத்தில் பிரம்மன் இந்திரன் சூரியன் சந்திரன் துர்வாசர் அகத்தியர் பரத்வாஜர் ஆகியோர் வந்து சிவபெருமானை வணங்கி அருள் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் கொடியேற்றம் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் பிச்சாடனர் புறப்பாடு ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறும். இவற்றில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சிவன் அடியார்கள் வந்து கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டு மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி திருக்கோயில் வைகாசி இன்று 31ஆம் தேதி காலை 8 மணிக்கு பூச நட்சத்திரத்தில் மிதுன லக்னத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதனை இதனை முன்னிட்டு சுவாமி அம்பாள் மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டிருந்ததுமூலவரான வைத்தியநாத சுவாமி சிவகாமிஅம்பாள்மற்றும் அனைத்து சுவாமிகளும் உற்சவ மூர்த்திகளாக சித்திரை சபை மண்டபத்திற்கு எழுந்தருளினர் இதனைத் தொடர்ந்து கோயில் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்துகாலை 8:35 மணிக்கு யாக குண்டம் அமைக்கப்பட்டு வேள்வி பூஜைகள் மகுட ஆகமவிதிமுறைப்படி சிறப்பாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கோயில் சிவாச்சாரியார் ரகு என்ற கைலாசபட்டர்கொடியேற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தார்.அப்பொழுது திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று கோஷம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து ஆகம முறைப்படி பூஜைகளை ரமேஷ் என்ற சுவாமிநாதன் பட்டர், கல்யாண விக்னேஷ் பட்டர், ஆனந்த் விஜய் பட்டர், தியாகராஜ , வைத்தியநாதப் பட்டர் ஆகியோர் பூஜைகளை நடத்தினர்.மேலும் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை கட்டப்பட்டது.
விழாவில் கோயில் செயல் அலுவலர் செ முத்து மணிகண்டன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சித்திர சபையில் வீற்றிருந்த உற்சவமூர்த்தி களுக்கும் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து காலை இரவு வேளைகளில் சுவாமி அம்பாள் வீதி உலா நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெறுகிறது. தொடர்ந்து 5ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் 6ஆம் தேதி இரவு 7 மணிக்கு சித்திரை திரு நட்சத்திரத்தில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணமும் சிறப்பாக நடைபெறுகிறது.7ஆம் தேதி பிச்சாடனர் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் சௌ. சக்கரை அம்மாள் கோயில் செயல் அலுவலர் செ. முத்து மணிகண்டன் கோயில் சிவாச்சாரியார்கள் மற்றும் திருக்கோயில் அலுவலர்களும் கோயில் பணியாளர்களும் சிறப்பாக செய்துள்ளனர்.