• Thu. Apr 25th, 2024

சிவகங்கையில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடமாடும் ஆட்டோக்கள் மூலம் தடுப்பூசி

சிவகங்கை நகர் பேருந்து நிலையம் முன்பாக பொது சுகாதாரத்துறையின் மூலம் கோவிட் -19 – க்கான மாபெரும் 5 – ம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி , தலைமையேற்று மாபெரும் 5 – ம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாமை துவக்கி வைத்து, நடமாடும் ஆட்டோ தடுப்பூசி திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அப்போது ஆட்சியர் பேசுகையில், தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க . மாபெரும் 5 – ம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகின்றன. மாவட்டத்தில் 750 முகாம்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது . 71,260 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் மருந்துகள் கையிருப்பில் உள்ளது .

மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோர் 6,79,525 நபர்கள் முதல் தவணை செலுத்தியுள்ளார்கள் . இரண்டாம் தவணையாக 1,91,442 நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்கள். மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 10,70,000 ஆகும். இதில் 8,70,967 பேர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் .

இந்த சிறப்பு முகாமின் நோக்கம் மாவட்டத்தில் 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தப்பட்டது என்ற நிலையை உருவாக்குவதாகும். மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையை உருவாக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி , தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் ராம்கணேஷ், இணை மகேஸ்வரன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) இயக்குநர் இளங்கோ இராஜேஸ்வரன், நகர் நல மருத்துவர் கலா, வட்டார மருத்துவ அலுவலர் பார்த்தசாரதி, சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், விஜயகுமார், பொது சுகாதாரத்துறை கண்காணிப்பு அலுவலர்கள் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *