விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் ஆன தொல் திருமாவளவனை அவதூறாக பேசிய பிஜேபி பொறுப்பாளரை குண்டர்த்தடுப்பு சட்டத்தில் கீழ் கைது செய்து சிறைப்படுத்த வலியுறுத்தி புதுக்கோட்டை ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

இன்று மாலை புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் சுசிலா கணேசன் செந்தமிழ் வளவன் திலீபன் ராஜா சரஸ்வதி தமிழ் தேசிகன் அம்பேத்கலவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கையில் வலியுறுத்தி கண்டன கோஷங்களை உறுப்பினர் இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் வழக்கறிஞர் பாவேந்தன் பங்கேற்றார் புதுக்கோட்டை மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் அண்ணாதுரை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்

வந்து செய்தியாளர்களை சந்தித்த சமத்துவ வழக்கறிஞர் சங்க மாநில செயலாளர் பார்வேந்தன் புதுக்கோட்டை மாவட்டம் பழைய கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்த பிஜேபி பொறுப்பாளர் கார்த்திகேயன் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரை சமூக வலைத்தளங்களில் ஜாதிப் பெயரைக் கூறி இழிவாகப் பேசி குற்றம் சுமத்தி வருவதாகவும் இது சம்பந்தமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் செந்தமிழ் வளவன் கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தற்பொழுது கார்த்திகேயன் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாகவும் ஜாதி வன்மத்தை தூண்டி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் பிஜேபி பொறுப்பாளர் கார்த்திகேயனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறைப்படுத்த வேண்டும் எனவும் அதற்காக சட்டத்தில் இடம் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.






