• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

உஷார்! உங்களுக்கே தெரியாமல் உங்கள் டேட்டாக்களை திருடும் ஆப்ஸ்..!

இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே மொபைல் போன் உபயோகிக்கின்றனர். பலர் தாம் உபயோகிக்கும் மொபைல் போன்கள் மூலம், தனியுரிமையை பாதிக்கக் கூடிய பிரச்சனைகள் எவ்வாறு ஏற்படுகிறது, அல்லது இந்த பிரச்னை தமக்கு இருக்கிறதா என்று கூட தெரியாமல் தான் உபயோகித்து வருகின்றனர்.

ஆண்ட்ராய்டில் உள்ள கூகுள் டயலர் மற்றும் மெசேஜஸ் ஆப்ஸ் என்ன தகவல்களை கூகுளுக்கு அனுப்புகிறது?
இதுகுறித்து பேராசிரியர் டக்ளஸ் லீத் கூறுகையில், இந்தப் பயன்பாடுகள் பயனர் தகவல்தொடர்புகள் பற்றிய தகவல்களைச் சேகரிக்கின்றன. இதில் செய்திகளின் SHA256 ஹாஷ் மற்றும் அவற்றின் நேர முத்திரை, தொலைபேசி எண்கள், உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புப் பதிவுகள், அழைப்பு காலம் மற்றும் நீளம் ஆகியவை அடங்கும்.

இது பின்னர் Google Play Services Clearcut logger சேவை மற்றும் Firebase Analytics சேவையைப் பயன்படுத்தி Google இன் சேவையகங்களுடன் பகிரப்படுகிறது. ஸ்பேம் வடிகட்டுதல் மற்றும் வணிக அழைப்பாளர் ஐடிகள் போன்ற அம்சங்களை இயக்கி, செய்தி அனுப்புபவர் மற்றும் பெறுநர் அல்லது அழைப்பில் உள்ள இரண்டு சாதனங்களை இணைக்க தரவு நிறுவனத்திற்கு உதவுகிறது.

கூகுள் டயலர் மற்றும் மெசேஜஸ் ஆப்ஸ் இரண்டிலும் எந்தத் தரவு சேகரிக்கப்படுகிறது என்பதை விளக்கும் தனியுரிமைக் கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.