• Sat. Apr 20th, 2024

‘கோயில் பிரசாதங்களுக்கு ஆவின் நெய் பயன்படுத்துக’ – தமிழக அரசு

கோயில் பிரசாதங்களுக்கு ஆவினில் கொள்முதல் செய்த நெய்யையே பயன்படுத்தவேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது. திருக்கோவில்களில் விளக்கேற்றவும், நெய்வேத்திய பிரசாதம் தயார் செய்யவும் பயன்படுத்தப்படும் வெண்ணை, நெய் போன்ற பொருட்களை ஆவின் நிறுவனம் மூலம் மட்டுமே கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரசாதங்களின் தரத்தினை மேம்படுத்தவும், பிரகாரங்களில் தரமற்ற நெய்யை பயன்படுத்தி விளக்கு/தீபம் ஏற்றுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசினை தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் கட்டாயம் பின்பற்ற, அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *