• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

நா.த.கட்சி சார்பில் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்.,

ByKalamegam Viswanathan

Oct 11, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரம் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் நேற்று முன்தினம் மலம் கலந்திருப்பதாக பொதுமக்கள் புகார் கூறியதன் அடிப்படையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு நேரில் சென்று குடிநீர் தொட்டி உள்ளிட்ட கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்

பின்னர் மலம் கலந்திருந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு குடிநீர் தொட்டி இருந்த பகுதி மற்றும் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் சுத்தம் செய்தனர் இந்த நிலையில் அம்மச்சியாபுரம் கிராமத்திற்கு நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அருள் ஜெயசீலன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் குடிநீர் தொட்டி இருந்த பகுதியை பார்வையிட்டனர் இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி பாதுகாப்பு படை வீரர் பாசறை மாநில தலைவர் பூமிநாதன் மாநில ஒருங்கிணைப்பாளர் சக்கரபாணி மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர்கள் சாரால் பாண்டியம்மாள் தொகுதி வேட்பாளர் நாகலட்சுமி மற்றும் மதுரை பாசறை பொறுப்பாளர்கள் மண்டல பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது

வேங்கை வயல் சம்பவம் போல் மதுரை மாவட்டத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது வேங்கைவயல் சம்பவத்தில் உரிய நடவடிக்கை தமிழக அரசு எடுத்திருந்தால் இதுபோன்ற தொடர் சம்பவங்கள் நடந்திருக்காது

மேலும் தற்போதும் அம்மச்சியாபுரம் கிராமத்தில் நடந்த சம்பவத்தை அரசு மூடி மறைக்கவே பார்ப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்

இந்த கிராமத்தில் ஒரு சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமே வசிப்பதாகவும் ஆகையால் சமுதாய வேறுபாட்டில் சம்பவம் நடக்கவில்லை என்றும் சம்பந்தப்பட்ட நபர் 15 வயது உள்ள நபர் என்றும் அதை அவர்களாக பேசி கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்

மேலும் மலம் கலந்த செய்தி தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வந்தவுடன் அதிகாரிகளிடம் இதுகுறித்து விளக்கம் கேட்ட போது அது மலம் இல்லை பெயிண்ட் என்று தவறான தகவலை அதிகாரிகள் கூறியதாகவும் தெரிகிறது

மலத்திற்கும் பெயிண்டிற்கும் வித்தியாசம் தெரியாமல் அதிகாரிகள் இருக்கின்றனர் இது மிகவும் கண்டிக்கத்தக்கது

மேலும் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு இதுவரை மாவட்ட ஆட்சித் தலைவரோ சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினரோ வந்து பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறவும் அல்லது அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவோ இல்லை
இதுவும் பொதுமக்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது ஆகையால் தவறு யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இரண்டு நாட்களுக்குள் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாம் தமிழர் கட்சி சார்பில் சோழவந்தானில் மிகப்பெரிய பஸ் மறியல் போராட்டம் நடத்துவோம் இந்த சம்பவத்தையும் அரசு கண்டும் காணாமல் விட்டுவிட்டால் தமிழகத்தில் அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற தொடங்கிவிடும். இதை நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது தவறு யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கூறினார்

பின்னர் நாம் தமிழர் கட்சியினர் கிராமத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் தற்போதைய நில குறித்து கேட்டறிந்தனர்