• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்-மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

Byகாயத்ரி

Jan 19, 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் நிலையில், இது தொடர்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் காலை 11.30 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துரைக்க உள்ளனர்.இந்நிலையில், தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் வார்டுகள் பங்கீடு மற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில், பல்வேறு கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.இத்தேர்தல் பிப்ரவரி மாதம் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால், பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சியினருடன் வார்டு பங்கீடு மற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றன.