கன்னியாகுமரியில் கடலில் கண்ணாடிப் பாலத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின், அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவியதின் 25_வது ஆண்டு விழாவின் அடையாளமாக திறந்து வைத்தப்பின், கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் கன்னியாகுமரியில், சுற்றுலா பயணிகள் அதிகம் நடமாடும் பகுதியில் மின்வாரிய பெட்டி பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குமரி மாவட்டம் பாதுகாப்பற்ற நிலையில் மின்வாரிய பெட்டி, உயிருக்கு ஆபத்தில் சுற்றுலாப் பயணிகள் குமரியில் அண்மை காலத்தில் மின்சார இணைப்பை பூமிக்குள் புதைத்து கொண்டு செல்லும் திட்டத்தில் அதன் இணைப்பு சம்பந்தப்பட்ட மின் கலப்பெட்டிகள் ஒவ்வொரு சந்திப்பிலும் வைக்கப்பட்டது, அதில் ஒன்று தான் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் படகு தளத்திற்கு செல்லும் பகுதியில் உள்ள இந்த மின் கலப்பெட்டியை அடுத்து இளநீர் வியாபாரம் செய்பவர் குவித்து வைத்திருக்கும் இளநீர் மலை போன்ற நிலையில், அந்த வழியாகத்தான் படகுதுறைக்கு செல்ல வேண்டி சுற்றுலா பயணிகள் குவியும் இடம். அந்த இடத்தில் இருக்கும் மின் இணைப்புகளுக்கான பெட்டி என்றைக்கு பெரும் விபத்தை உருவாக்குமோ.? கன்னியாகுமரி நகராட்சி, மின்சாராத்துறை, காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து எதிர்காலத்தில் வர போகும் விபத்தை தடுக்குமா.?
பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிலையத்திற்கு எதிரே, மின்வாரியத்துக்கு சொந்தமான இணைப்பு பெட்டி ஒன்று பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த பகுதியில் தினமும் எண்ணற்ற சுற்றுலா பயணிகள் வருகை தருவதால், கூட்ட நெரிசல் நேரங்களில் பயணிகள் இந்தப் பெட்டியை தவிர்க்க முடியாமல் கடந்து செல்வதாகவும், சிலர் அறியாமலே அதைத் தொட்டும் , தள்ளிக்கொண்டும் செல்கின்றனர்.
இதனால் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த இணைப்பு பெட்டியை முறையாக சீரமைத்து, அதன் சுற்று பாதுகாப்பு அறனை அமைக்க வேண்டியதாயிருக்கிறது என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.