மூன்று வயது குழந்தைகளுக்கு மதுரையில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி; வியக்கவைக்கும் தனித்திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்
சிலம்பாட்ட வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3% இடஒதுக்கீடு என்ற முதல்வரின் அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டி உள்ளது; எம்எல்ஏ தமிழரசி பேட்டி
பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம் குறித்து மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மாவட்டம் தனியார் பள்ளி விளையாட்டு திடலில் மாவட்ட அளவிலான தனித்திறன் சிலம்பம் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி துவங்கி வைத்தார்.
இந்த சிலம்பப் போட்டியில் மூன்று வயது குழந்தைகள் முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வரையிலான 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தினர்.
இதில் கலந்துகொண்ட சிறுவர், சிறுமியர்கள் உற்சாகத்துடன் வியக்கவைக்கும் வகையில் திறமையை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றனர்.
இதில் கலந்துகொண்ட வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.
இது குறித்து மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி கூறும்போது;
கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் சிலம்பப் போட்டிக்கு பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக சிலம்பாட்டம் போட்டி வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளது மாணவர்களிடையே சிலம்பப் போட்டியில் பங்கேற்கும் ஆர்வத்தை தூண்டி உள்ளது.
மதுரையில் சிலம்பத்தில் அசத்திய குழந்தைகள்
