• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மதுரை வில்லாபுரத்தில் ஐக்கிய ஜமாஅத் மாநில பொதுக்குழு கூட்டம்

ByKalamegam Viswanathan

Feb 26, 2025

மதுரை மாநகர் வில்லாபுரத்தில் தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமா அத் கூட்டமைப்பு மாநில பொதுகுழு கூட்டம் நடைபெற்றது.
தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமா அத் கூட்டமைப்பு சார்பில் மாநில பொதுகுழு கூட்டம், மதுரை வில்லாபுரம் ரய்யான் கன்வென்சன் ஹாலில் நடைபெற்றது. தமிழகத்தில் மத நல்லிணக்கம் சீர்கெடமுயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை, இஸ்லாமியர்களை பாதிக்கும் வக்பு திருத்த சட்டம், அனைத்து மத வழிபாட்டு தலத்திற்கு ஒரே மின் கணக்கீடு, உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் முகமது பஷீர் தலைமை தாங்கினார் மற்றும் முகம்மது பெய்க்,லியாகத் அலி காஜா மொய்தின் இனாயத் துல்லா உள்ளிட்டோர்புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து ஐக்கிய ஜமாத் மாநில பொதுக்குழுவின் சார்பில் ஆரிப் சுல்தான் தீர்மானங்களை வாசித்தார்.

  1. தமிழகத்தில் மத நல்லிணக்கம் சகோதரத்துவத்தை சிதைக்கும் செயலில் ஈடுபடுவது மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .

2 .அனைத்து வழிபாட்டுத்தலங்களுக்கும் மின்சார கணக்கீடு குறைந்தபட்சமாக ஒரே அளவில் இருக்க வேண்டும்.

3,முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடை 3.5சதவீதத்தில் லிருந்து 7 சதவீதமாக உயர்த்த வேண்டும்

  1. வக்பு திருத்த சட்டம் கொண்டு வருவதை தடுத்து நிறுத்தி தமிழக மஸ்தி மஸ்ஜிதுகளின் ஜமாத் அத் கூட்டமைப்பின் மூலம் போராட்டம் நடத்துவது.
  2. வக்பு சொத்துகளில் கல்வி நிலையங்கள் 30 ஆண்டு கால குத்தகை கொடுக்கும் அதிகாரத்தை மாநில அரசு வாரியத்திற்கு வழங்க வேண்டும். உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டத்திற்குதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பேட்டி
முகம்மது பஷிர்
தலைவர்,
தமிழக மஸ்ஜித்துகளின் ஐக்கிய ஜமா அத் கூட்டமைப்பு.