• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திமுகவில் ஐக்கியமான பாஜகவினர்!..

திருப்பத்தூரில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் மற்றும் பாஜக, அமமுக, நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் அவரது இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் செயலாளர் மீனாட்சி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பாஜக சிறுபான்மை மாவட்ட தலைவர் பீட்டர் ஆனந்த், தேவகோட்டை மகளிர் நகர இணைச் செயலாளர் லதா, தேவகோட்டை மகளிர் நகர் துணைத் தலைவர் சிகப்பி, பாரதிய ஜனதா மாவட்ட இளைஞரணி தலைவர் பாலமுருகன், தேவகோட்டை நகர மாணவரணி மதிவாணன், ராஜேஷ்குமார், உள்ளிட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.