தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தி வருவதை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அன்னதானப்பட்டி காவல் துறையினர் கந்தப்ப காலனி பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குடோனில் பதுக்கி கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக வாகனத்தில் புகையிலை மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் கண்டதும் ஊழியர்கள் தப்பி ஓடினர் இதனையடுத்து குடோனுக்கு சென்ற காவல்துறையினர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 51 மூட்டைகள் கொண்ட 750 கிலோ புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனுடைய மதிப்பு சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஆகும்.

விசாரணையில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான இந்த குடோனில் மதன் என்பவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 51 மூட்டைகளில் 750 கிலோ கொண்ட சுமார் இரண்டு லட்சத்தி 25 ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை காவல் துறையினர் இன்று அதிரடியாக பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.