• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மே 12 ஆம் தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்

ByA.Tamilselvan

Apr 24, 2023

வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளன.
தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் கடந்த 21 தேதி நிறைவேற்றப்பட்டது. திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், சிஐடியு, விசிக கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனை அடுத்து 12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக முக்கிய தொழிற் சங்கங்களுடன் தமிழக அரசு இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. இந்த நிலையில் தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை அதிகரிக்கும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 12 ஆம் தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் அறிவித்துள்ளன. அன்றைய தினம் பேருந்து மற்றும் ஆட்டோக்களை தொழிற்சங்கத்தினர் இயக்கமாட்டார்கள் என்று சிஐடியூ மற்றும் ஏஐடியூசி, எச்.எம்.எஸ் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் சென்னையில் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.