சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டி மட்டப்பாறை பிரிவில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக நாச்சிகுளம் கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டிக்கு தகவல் கிடைத்தது. இவர் சோழவந்தான் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தின் மீட்டு மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தார். இறந்துகிடந்தவர் பச்சை நிற அரக்கை சட்டை, கட்டம் போட்ட கைலி சிவப்பு கலர் தூண்டும் அணிந்திருந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.




