வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத பிரேதம் உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாநகர கரிமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட வைகை ஆறு காமராஜர் பாலத்தின் மையப்பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் ஒன்று மிதந்து கொண்டு இருந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தெரிந்த கரிமேடு போலீசார் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் ஆற்றில் குளிக்கும் போது தண்ணீரில் அடித்து வரப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டவரா இல்லை கொலையா என கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வைகை ஆற்று பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் கடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..
வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத பிரேதம் -போலீசார் தீவிர விசாரணை





