• Sat. Feb 15th, 2025

நீருக்கு அடியில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்

Byவிஷா

Apr 12, 2024

சென்னை நீலாங்கரையில் ஸ்கூபா டைவர்ஸ் ஆழ் கடலில் இறங்கி, 60 அடி ஆழம் சென்று வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், நேற்று சென்னை நீலாங்கரையில் 6 ஸ்கூபா டைவர்ஸ் ஆழ் கடலில் இறங்கி, 60 அடி ஆழம் சென்று வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு பதாகை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வைத்திருந்தனர்.