• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அர்ஜென்டினாவில் கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத் தீ

அர்ஜென்டினாவில் கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களும், உள்ளூர் மக்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

அர்ஜென்டினாவின் தெற்குப் பகுதியான காரியென்டெஸில் உள்ள வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து காட்டுத் தீ எரிந்து வருகிறது. இதுவரை 5 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான பசுமைப் பகுதிகள் தீக்கிரையாகி இருக்கும் நிலையில், தீயணைப்புப் படையினரும், உள்ளூர் மக்களும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக எரிந்து வரும் காட்டுத் தீ அருகில் உள்ள கிராமங்களுக்கும் பரவியதால் அங்கு பயிரிடப்பட்டிருந்த வேளாண் பயிர்களும் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளன. குறிப்பாக பருத்தி, நெல் போன்ற பயிர்களும், கால்நடைகளும் தீயில் கருகியுள்ளன. குறைந்த மழைப்பொழிவை கொண்டு வரும் லா நினா காலநிலை சூழல் தொடர்ந்து இரண்டாவது முறையாக அர்ஜென்டினாவில் நிலவுகிறது. இதன் காரணமாக அந்நாட்டின் மத்திய வேளாண் பகுதிகள் நீரின்றி வறண்டு வருகிறது. இதனால் அர்ஜென்டினாவின் வேளாண் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டதோடு, ஏற்றுமதி தொழிலும் முடங்கியுள்ளது.