• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

போலந்திற்கு தப்பி சென்ற உக்ரைன் அதிபர்…

Byகாயத்ரி

Mar 5, 2022

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி போலந்து நாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கீவ், மைகோலெவ், செர்னிஹிவ் உள்ளிட்ட நகரங்களில் கிளஸ்டர் வகை குண்டுகளை ஏவி பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இப்போரில் ரஷ்யாவின் முக்கிய குறியாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கருதப்படுகிறார். இதனால், ரஷ்ய அதிபர் புடினின் நேரடி பார்வையின் கீழ் 3 கூலிப்படை அனுப்பப்பட்டு உள்ளதாக சர்வதேச உளவுத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூலிப்படையின் ஒரே குறி, ரஷ்ய ராணுவத்துடன் உள்ளே நுழைந்து அதிபர் செலன்ஸ்கியை படுகொலை செய்வது மட்டுமே. கடந்த ஒரு வாரத்தில் இப்படையின் 3 தாக்குதல் முயற்சியில் இருந்து செலன்ஸ்கி உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

பயங்கர போர் நடந்த சூழலிலும், தலைநகர் கீவ்வில் தனது பாதுகாவலர்களுடன் தங்கி இருந்த அதிபர் செலன்ஸ்கி தற்போது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அவர் போலந்து நாட்டிற்கு தப்பி ஓடியிருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. சில நாட்களுக்கு முன்பாக இதே போல் உக்ரைன் ராணுவத்தை சரணடையச் சொன்னதாக செலன்ஸ்கி கூறியது போல் ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பின்னர், கீவ் நகரின் தெருக்களில் நின்றபடி செலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.