• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

உக்ரைனின் தேசிய தொலைத்தொடர்பு நிறுவனம் செயலிழப்பு….

Byகாயத்ரி

Mar 29, 2022

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த மாதம் 24ம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சிக்கி சீர்குலைந்துள்ளன.

இந்நிலையில், ரஷியா போர் தொடுத்ததன் விளைவாக, உக்ரைனின் தேசிய தொலைத்தொடர்பு நிறுவனமான யுகேஆர் டெலிகாம் கடும் செயலிழப்பைச் சந்தித்துள்ளது.இது தொடர்பாக கீவ் நகர அரசு அதிகாரிகள் கூறுகையில், உக்ரைனில் தகவல் தொடர்பு சேவை கடுமையாக செயலிழந்துள்ளது. இதற்கு சைபர் தாக்குதல் காரணமா என விசாரித்து வருகின்றனர். நேற்று காலை தொடங்கிய மின்தடை மாலை வரை நீடித்தது என தெரிவித்தனர்.