• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள சிறுவனுக்கு நிதி உதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் ஜெயா தம்பதியினர் கூலி வேலை செய்துவந்தனர். மழையின் காரணமாக ஊரில் போதிய வேலை இல்லாததால் தேனியில் கட்டிடவேலைக்கு செல்லும்போது 8 வயது மகன் பகவதியையும் உடன் அழைத்து சென்றனர்.

பெற்றோர்கள் இருவரும் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது விளையாடி கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராதவிதமாக அங்குள்ள கரண்ட் வொயரை தொட்டு விட்டான். அதில் சிறுவனின் உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு தற்போது மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றான்.

கடந்த 2 மாதமாக இந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போதுமான பண வசதி இல்லாமல் பெற்றோர்கள் தவித்து வருவதாக கிடைத்த தகவலின்பேரில் திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் சிறுவனின் தந்தை செல்வகுமாரிடன் மருத்துவ செலவிற்கு ரூ.15000த்தை மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் கனிமொழி, மன்ற செயலாளர் பேராசிரியர் செல்லத்துரை ஆகியோர் வழங்கினர். இதில் மன்ற மாவட்ட துணை செயலர்கள் சுபாஷ், வீரா முத்துசாமி, புளியங்குடி நகர செயலாளர் மாரியப்பன் மற்றும் மன்ற நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.