கழக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பாவூர்சத்திரம் சொக்கலால் அரசு மேல்நிலை பள்ளிக்கு 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இன்வெர்ட்டர் உபகரணங்களை தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனி, துறை மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் மேகநாதன், சங்கரன்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துச்செல்வி, மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், கீழப்பாவூர் பேரூர் பொருளாளர் பொன் செல்வன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
