தமிழக அமைச்சரவை நாளை மாற்றப்படுகிறது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகிறார். மேலும் புதிய அமைச்சர்களுக்கு இன்று 3.30 மணி அளவில் ஆளுநர் பதியேற்பு செய்து வைக்கிறார் என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்கே!!
நீண்ட மாதமாக அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என அனைத்து மாவட்ட செயலாளர்களும், திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கோரிக்கை வைத்துக் கொண்டே வந்தனர். அதற்கு முதல்வர் ஸ்டாலின் மௌனமாகவே தன்னுடைய பதிலை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். ஆனால் முதல்வர் ஸ்டாலினுக்கும், நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும் செந்தில் பாலாஜி வந்தவுடன் தான் இது நடக்கும் என்று மட்டும்.

நேற்றைய முன் தினம் சிறையில் இருந்து வந்த செந்தில்பாலாஜி, அமைச்சர் உதயநிதியை சந்தித்து சின்னவரே நான் வந்துட்டேன். அப்பாவை பாக்கணும்னு ஆசையா இருக்கு என்று பேசிக் கட்டித் தழுவி கொண்டனர். சொன்னபடியே டெல்லியில் இருந்து பறந்து வந்த முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை கண்டதும் முகப்பொலிவோடு நீ கவலைப்படாத, சந்தோஷமா இரு என்று தோள்களை தட்டிக் கொடுத்து, நான் இருக்கிறேன் என்று சூட்சுமமாக சென்னை விமான நிலையத்தில் சந்தித்து விட்டு வழி அனுப்பினார். அதற்கு முன்னதாக செந்தில் பாலாஜி அண்ணா சமாதிக்கும், கலைஞர்( கருணாநிதி) சமாதிக்கும் சென்று மலர் மாலையை மரியாதையாக அணிந்து விட்டு மலர்களை தூவி உங்கள் ஆசி எனக்கு எப்போதும் வேண்டும் என்று சொல்லாமல் சொல்லி அனைத்து திமுக தொண்டர்களை பார்த்து நான் வந்துட்டேன் பா என்று தெம்பையும், தைரியத்தையும் கண்களால் சொன்னார் செந்தில் பாலாஜி. அப்போதே முடிவாகிவிட்டது துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின் என்று. ஆனால் திமுகவின் மூத்த அமைச்சர்கள், அய்யய்யோ நமக்கு பதவி பறிபோயிருமோ? என்ற அச்சமும், பயமும் நேற்றைய முன் தினத்திலிருந்து வெளிப்படையாகவே தெரிந்து வந்தது. அதுவும் குறிப்பாக அமைச்சர் பொன்முடி, அமைச்சர் ராஜ கண்ணப்பன், ஏன் மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு கூட, அதன்படியே ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் ஸ்டாலின் தனது அமைச்சரவையில் மாற்றம் வேண்டுமென ரெடியாக இருந்த கடிதம் ஆளுநர் மாளிகைக்கு பறந்து செல்ல தற்போது அதற்கு ஆளுநர் ரவியும் பரிந்துரை செய்து விட்டு இன்று மாலை 3:30 மணியளவில் அமைச்சரையில் மாற்றம் செய்யப்படும் என அறிவுப்பையும் வெளியிட்டு இருக்கிறார்.
இதன் அடிப்படையில் இன்று மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராஜேந்திரன் மூவரும் அமைச்சரவையிலிருந்து விடுவிகக்கப்பட்டிருக்கின்றனர். கோவி செழியன், செந்தில் பாலாஜி, எஸ்.எம்.நாசர் , ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சரவைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், சில முக்கிய மாற்றங்களும் நடக்கிறது. புதிய பட்டியலில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை – சிவ.வி மெய்யநாதன். பொன்முடி – வனத்துறை மதிவேந்தன் – ஆதிதிராவிடர் நலத்துறை, ராஜ கண்ணப்பன் – பால்வளத்துறை காதி மற்றும் கிராம, கயல்விழி செல்வராஜ் – மனிதவள மேம்பாடு, தங்கம் தென்னரசு – நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் என அமைச்சர் அவையில் புதிய மாற்றங்களும் அரங்கேற உள்ளது.

அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியும் கனவாக இருந்தது, அந்தக் கனவும் பலித்து விட்டது. அமைச்சர் உதயநிதிக்கு, செந்தில் பாலாஜி உறுதுணையாக இருப்பார் என உறுதியும் செய்யப்பட்டுள்ளது.