

“உதயகுமார் எது செய்தாலும் சூப்பரோ சூப்பர்ய்யா! சின்ன விழா நடத்தினாலும் அதை பெரிய விழாவா போக்கசிங் காமிக்கரதல கில்லாடிதான்.” அப்படி என்ன இப்படி ஒரு பேச்சு அதிமுக தலைமைக்கழகம் வரை தற்போது கிழம்பியிருக்கின்றது என்கிறீர்களா? உதயகுமார் பரோட்டா போட்ட சம்பவத்தைப்பற்றி தான்.
தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் வீட்டுவரி, மின்சாரவரி, பெண்கள் பாதுகாப்பின்மை, சட்டஒழுங்கு சீர்கேடு என்ற பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் திமுக அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேடிக்கைகள், வினோத செயல்கள், ஆச்சரியப்பட வைக்கின்ற குற்றச்சாட்டுகள் நடந்து அரங்கேறினர். இதில் மதுரை மாவட்டம் மட்டும் விதிவிலக்கா என்ன? திருமங்கலம் தொகுதியிலுள்ள குண்ணத்தூர் ஜெ. கோவிலில் முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் கொஞ்சம் வித்தியாசமாக நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கு மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டாலும், “எல்லோரும் ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் சுட சுட பரோட்டா, குருமா, குஸ்கா ரெடியா இருக்குப்பா, சாப்பாட்டு தான் போகணும் என்று உதயகுமார் சொல்ல”.., ஏம்ப்பா உதயகுமார் அண்ணன் பெசாலிக்கா சொல்றாரு.., ஆர்ப்பாட்டத்தில் கூடியிருந்த தொண்டர்கள் பேச்சு கிளம்ப.., உனக்கு தெரியாதா விஷயம்.., அண்ணன் கையால மைதா மாவை பிசைஞ்சு அதை பக்குவமா உருண்ட பிடிச்ச பரோட்டா வீசன அழகே தனியப்பா!
நம்ம அண்ணே உதயகுமரா இப்படி செஞ்சாரு! ஆமாப்பா..! என்று பேசிக் கொண்டனர். திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஹைலைட் ஆச்சோ இல்லையோ, உதயகுமார் வீசிய பரோட்டா தொண்டர்களுக்கு பசியாற்றியது தான் ஹைலைட்டே!.

