• Fri. Apr 26th, 2024

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமனம்!

ByA.Tamilselvan

Jul 25, 2022

ஓபிஎஸ் அணியின் இணை ஒருங்கிணைப்பாளராக ஆர்.வைத்திலிங்கத்தை அந்த அணியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் நியமித்துள்ளார்.
கடந்த 11 ஆம் தேதி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.இதையடுத்து அதிமுகவிலிருந்து ஓபிஎஸ், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்ட 18 பேரை எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார். இதையடுத்து “என்னை நீக்க எடப்படி பழனிச்சாமிக்கோ , கே பி முனுசாமிக்கோ அதிகாரம் இல்லை என கூறிய ஓபிஎஸ் அவர்கள் இருவரையும் கட்சியிலிருந்து நான் நீக்குகிறேன்” என கூறி நீக்கினார்.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த ஓபிஎஸ், வீடு திரும்பியதும் 14 மாவட்டச் செயலாளர்களை ஓபிஎஸ் நியமித்து அதிரடி காட்டினார். அதன்படி ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக தர்மர், கோவை மாநகர் மாவட்டச் செயலாளராக கோவை செல்வராஜ், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்பி ஆர் கோபாலகிருஷ்ணன் என 14 பேர் நியமிக்கப்பட்டனர்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமிக்கப்படுகிறார்.
துணை ஒருங்கிணைப்பாளர்களாக கு.ப.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் நியமனம் என கூறியுள்ளார். மேலும் இன்னொரு அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் 10 பேரை நீக்கியுள்ளார். அதாவது முன்னாள் அமைச்சர்கள் கேடி ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், சிறுணியம் பலராமன், எம்சி சம்பத், சொரத்தூர் ராஜேந்திரன், பாலகிருஷ்ண ரெட்டி, கிருஷ்ண முரளி, வி எஸ் சேதுராமன், ரவிச்சந்திரன் ஆகிய 10 பேரை ஓபிஎஸ் நீக்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *