• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

யுசிபிஐ மாநிலச் செயலாளர் பாஸ்கரன் விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தேவர் பெயரை சூட்டிடக் கோரிக்கை

Byகுமார்

Jan 23, 2024

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் யுசிபிஐ மாநிலச் செயலாளர் பாஸ்கரன் தெரிவித்ததாவது,

மதவெறி பாசிச அரசியலை முறியடிக்க, மீண்டும் ஜனநாயகம் தழைத்திட இந்தியா (I.N.D.I.A) கூட்டணியை நாங்கள் ஆதரிக்கின்றோம். மதுரை விமான நிலையத்திற்கு விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவர் பெயரை, சம்மந்தப்பட்ட மத்திய அரசின் விமான போக்குவரத்து துறை சூட்டிட வேண்டும். மேலும், ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது அப்பாவி மக்கள் காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூடு நடத்த காரணமான காவல்துறை அன்றைய ஆட்சியாளர்கள், அன்றைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் மீது இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொலை வழக்கு பதிவு செய்து நீதியினை நிலைநாட்ட வேண்டும். ஜல்லிக்கட்டில் முதல் இரண்டு இடம் பிடித்த வீரர்களுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து அவரை சனாதன மாமுனி போல் சித்தரிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் அடாவடி செயலை கண்டிக்கத்தக்கது. மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டுவது. கர்நாடக பாஜக எம்.பியான அனந்தகுமார் ஹெக்டே, நாடு முழுவதும் உள்ள மசூதிகளை இடித்து விட்டு அங்கு கோயில்களை கட்டுவோம் என்று சமீபத்தில் கூறியதை கண்டிக்கின்றோம். மேலும், இத்தகைய ஆபத்தான மதவாத நிலை அரசியலில் இருந்து நமது தேசத்தை பாதுகாக்க இடதுசாரி ஜனநாயக கட்சிகளின் ஒற்றுமையை பலப்படுத்தி நம் தேசம் காக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என்று கூறினார்.