• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

மதுரை மாநகரில் அசுர வேகத்தில் பறக்கும் இருசக்கர வாகனங்கள்

ByKalamegam Viswanathan

Jun 4, 2023

மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் அசுர வேகத்தில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் பொதுமக்கள் அச்சம்.
மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே வாலிபர்கள் விலை உயர்ந்த வாகனங்களில் சாகசம் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் சம்பவம் என்பது அதிகரித்துள்ளது.


மதுரையின் பிரதான சாலையாக இருக்கக்கூடிய ஏவி மேம்பாலம், புதிதாக திறக்கப்பட்ட நத்தம் பறக்கும் பாலம், சிவகங்கை விரைவுச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அசுர வேகத்தில் இரண்டு நபர்கள் முதல் ஐந்து நபர்கள் ஒரே வாகனத்தில் சென்று சாகசம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மேலும் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட வாலிபர்கள் பைக் சாகசம் செய்ததாக மதுரை மாநகரில் கைது செய்யப்பட்டு வழக்கு செய்ய பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.