மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே வடிவேல் கரை பாலத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பொள்ளாச்சியில் இருந்து கோவில்பட்டிக்கு கோழி தீவனம் ஏற்றி வந்த லாரி நாகமலை புதுக்கோட்டை அடுத்து வடிவேல் கரை பாலத்திற்கு அருகே டயர் வெடித்து சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தது. அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து சுண்டல் ஏற்றி அவ்வழியே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து, நின்று கொண்டிருந்த கோழித்தீவனம் ஏற்றி வந்த லாரியின பின்னால் மோதியதில் அவ் வாகனத்தை ஒட்டி வந்த தருமபுரியை சார்ந்த டிரைவர் பெரியசாமி 41/2023 சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து வந்த நாகமலை புதுக்கோட்டை காவல் துறையினர் மதுரை டவுன்தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை டவுன் மோட்டார் வாகன நிலையை அலுவலர் கண்ணன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ரோந்து பிரிவினரும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி லாரியில் சிக்கி இருந்த உடலை மீட்டு நாகமலை புதுக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் உடல் கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி அ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீஸ் சார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.