ஜார்க்கண்ட் மாநிலத்தில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் லோகோ பைலட்டுகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் என்டிபிசிக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்ல சரக்கு ரயில்கள் பயன்படுத்தப்படுகின்றன. இன்று அதிகாலை ஜார்க்கண்ட் மாநிலம் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் நிலக்கரி கொண்டு சென்ற இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் இரண்டு லோகோ பைலட்டுகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பர்ஹைத் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று அதிகாலை 3 மணியளவில் போக்னாதிஹ் என்ற இடத்தில் சரக்கு ரயில்கள் இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்திற்கு பிறகு இரண்டு ரயில்களும் தடம் புரண்டன. இதையொட்டி மீட்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.