• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

அயர்லாந்தில் பயங்கர கார் விபத்து – இந்திய மாணவர்கள் இருவர் பலி

ByP.Kavitha Kumar

Feb 4, 2025

அயர்லாந்தில் கார் மரத்தில் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்தில் உள்ள கவுண்டி கார்லோ நகரில் இந்தியாவைச் சேர்ந்த செருகுரி சுரேஷ் சவுத்ரி மற்றும் பார்க்லகவ் சிந்தூரி என்ற மாணவர்கள் அங்கு உள்ள ஒரு தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர். இவர்கள் இருவரும் மேலும் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து கார்லோ நகரில் வாடகை வீட்டில் தங்கி பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர்.
இந்த நிலையில் நண்பர்கள் நான்கு பேரும் காரில் மவுன்ட் லெய்ன்ஸ்டர் பகுதியில் இருந்து கார்லோ நகருக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து அவ்வழியே வந்தவர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்

இந்த விபத்தில் செருகுரி சுரேஷ் சவுத்ரி மற்றும் பார்கவ் சிந்தூரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்ததது. அவர்களது இரு நண்பர்களும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அயார்லாந்தில் நடந்த கார் விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.