தமிழகத்தில் ஒரே நேரத்தில் ஜூன் 30ம் தேதியன்று இரண்டு முக்கிய அதிகாரிகளின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.
தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் மற்றும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் ஆகியோர் வருகின்ற ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்த பிறகு தலைமைச் செயலாளராக இறையன்பும், டிஜிபி யாக சைலேந்திரபாபுவும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வருகின்ற ஜூன் 30-ம் தேதியுடன் இருவரது பணிக்காலமும் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து இறையன்புவுக்கு தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பதவி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இயக்குனர் பதவி வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
ஜூன் 30ல் ஓய்வு பெறும் தமிழகத்தின் இரண்டு முக்கிய அதிகாரிகள்..!
