• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கொரானா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரட்டை குழந்தை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்தவர் பார்கவி மலைச்சாமி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகி நிலையில், கடந்த 20ஆம் தேதி நிறைமாத கர்ப்பத்துடன் பார்கவி தலை பிரசவத்திற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரானா தொற்று இருப்பதை கண்டறிந்தனர். மேலும் தாய், குழந்தைகளின் உயிரை காக்கும் பொருட்டு முதல்வர் மருத்துவர் ரேவதி பாலன் தலைமையில், மகப்பேறு மருத்துவ தலைவர் காயத்ரி மருத்துவர் பிரசன்னா லட்சுமி குழுவினர் துரிதமாக செயல்பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

இதில் இரு ஆண் குழந்தைகள் பிறந்தது. தாய் மற்றும் குழந்தைகள் ஆகிய மூவரும் நலமாக உள்ளனர். கொரானா நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் இரு குழந்தைகள் பெற்ற நிகழ்வு அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்தது.