கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார் என்று எம்,ஜி.ஆருக்கு தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்தநாள் விழாவை அதிமுக தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்,ஜி.ஆரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் தொடர்பாக தனது எக்ஸ் பதிவில், ” அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார். அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரே தமிழக அரசியலின் அதிசயம் ஆனார். இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.