• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆட்டோ மீது லாரி கவிழ்ந்து விபத்து…டிரைவர் உயிரிழப்பு….

Byகுமார்

Dec 23, 2021

மதுரை திருப்பரங்குன்றம் அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது மண் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கன்னியாகுமரி – காஷ்மீர் நான்கு வழிச்சாலையில் திருமங்கலம் பகுதியில் இருந்து தனக்கன்குளம் பகுதியிலுள்ள நிலையூர் கண்மாயில் கட்டப்பட்டுவரும் கட்டிட பணிக்கு கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி கூத்தியார்குண்டு அருகே வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்திற்கு செல்லக்கூடிய இணைப்பு சாலையில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது டிப்பர் லாரி கவிழ்ந்ததில் ஆட்டோ டிரைவர் உட்பட லாரி டிரைவர் படுகாயம் அடைந்தனர்.

இதைத்தொடந்து தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஆட்டோ டிரைவர் கோபால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.