• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

விஜய்யுடன் மீண்டும் நாயகியாக நடிக்க த்ரிஷா ஒப்பந்தம்?

நடிகர் விஜய் இப்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் வாரிசு படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார்.தெலுங்குதயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கும் இந்தப்படம் விஜய்யின் 66 ஆவது படம்.
66 ஆவது படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே 67 ஆவது படத்தின் வேலைகளும் தொடங்கியிருக்கிறது.விஜய்யின் 67 ஆவது படத்தை மாஸ்டர்படத்தின்இணைதயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கிறார்.அப்படத்தை மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக நடிக்க த்ரிஷாவை ஒப்பந்தம் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.மூன்று வில்லன்களில் ஒருவராக மலையாள நடிகர் பிருத்விராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்
ஒவ்வொரு படத்துக்கும் புதுப்புது நாயகிகளைத் தேடிக்கொண்டிருக்கும் விஜய் பட இயக்குநர்கள் அவர் நடிக்கும் 67 வது படத்திற்குத்ரிஷா எப்படி ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்றால், கதைப்படி அவர் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்திருப்பதாகச் கூறுகின்றனர்இந்தக்கதையில் விஜய்யின் வேடமும் மாறுபட்டதாக அமைந்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.