• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் முப்பெரும் விழா சிறப்பு கண்காட்சி

ByI.Sekar

Mar 31, 2024

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூரில் உள்ள லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் முப்பெரும் விழா சிறப்பு கண்காட்சி நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளித்தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமை தாங்கினார். பள்ளிச் செயலாளர் மாத்யூஜோயல் , பள்ளி ஆலோசகர்கள் தமயந்தி, பிரைசிலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்விக் கண்காட்சி அகாடமி எக்ஸ்போவை ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் சந்திரகலா பொன்னுத்துரை மற்றும் திம்மரசநாயக்கனூர் ஊராட்சி தலைவர் அக்சயா ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.

கல்விக்கண்காட்சி படைப்பில் பெற்றோர்கள் பங்களிப்பாக பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டு தொன்மை வாய்ந்த வீட்டு உபயோக பொருள்களை தற்கால குழந்தைகளும் அறிந்து கொள்ளும் வண்ணம் படைப்பாக வைத்திருந்தனர்

ரேடியோ,  டேப்ரெக்கார்டர், சிடிபிளேயர், பேட்டரிக்கட்டை,  ஆடியோகேசட்  மற்றும் வீடியோகேசட் மற்றும் பழங்கால புகைப்பட மற்றும் வீடியோ கேமராக்கள் பழங்கால நாணயங்கள், பழங்கால ஆடைகள் மற்றும் ஆடை வடிவமைப்பு கருவிகள், உலக்கை, உரல், கும்பா, செம்பு மற்றும் தானியங்களை அளக்க பயன்படும் உலக்கு ,கால்படி ,அரைப்படி, முழுப்படி மரக்கால் உள்ளிட்ட அளவீட்டு கருவிகள்,
தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களின் படங்கள், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தி, சுத்தி கோடாலி, அருவாள், பனைஅருவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்ணைக் கவரும் விதத்தில் அலங்கரிக்கப்பட்டு கண்காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இவற்றை பார்வையாளர்கள் மட்டுமல்லாது பள்ளி மாணவ, மாணவிகளும் வியப்புடன் பார்த்து அறிந்து கொண்டனர்.

இதையடுத்து பள்ளி மாணவர்களே தயாரித்து கண்காட்சியில் இடம்பெற்ற அறிவியல் பொருட்களை ஆங்கிலத்தில் சரளமாக பேசி பார்வையாளர்களுக்கு செயல்முறை விளக்கமாக செய்து விளக்கிக் கூறியது அனைவரையும் பெரிதும் கவர்ந்தது.

பெற்றோர்களின் சிறந்த படைப்புகளுக்கு ஓய்வுபெற்ற மாவட்ட கல்விஅலுவலர் சிந்தாமுதர்மைதீன் பரிசுகளை வழங்கினார்.ஓய்வுபெற்ற பேராசிரியர் பிரபாகர்ஜோசப் வாழ்த்துரை வழங்கினார்.

கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பரிசுப்பொருட்கள் சான்றிதழ்கள் இனிப்புகள் வழங்கப்பட்டன.

விழா ஏற்பாடுகளை பள்ளிமுதல்வர் உமாமகேஸ்வரி தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள் கவிதா, உமா, பாண்டிச்செல்வி, ராகினி, சியாமினி, பானுப்பிரியா, கோகிலா, நித்யா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர் .