• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருச்சியில் அதிர்ச்சி.. 650 கிலோ ரசாயன மீன்கள் பறிமுதல்!

By

Aug 26, 2021 ,
Trichy

திருச்சி உறையூரில் உள்ள லிங்கநகர் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில், மீன்வளத்துறை துணை இயக்குநர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், மொத்தம் 14 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அதில், பார்மலின் தடவிய 350 கிலோ மீன்களும், கெட்டுப்போன 300 கிலோ மீன்களும் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 650 கிலோ மீன்கள் மாநகராட்சி குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லபட்டு அழிக்கப்பட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து வியாபாரிகள் இதுபோன்ற ரசாயனம் தடவிய மீன்களை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.